Tuesday 3 October 2017

போராட்டம்

                              போராட்டம் 
இதற்கிடையில் வீட்டின் வறுமையைப் போக்க வையவனின் தாய் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு உதவ முற்பட்டார். பரமசிவம் சொந்த ஊருக்குப் போனாலும் தன் மக்கள் (வையவனுக்குப் பிறகு பிறந்த ஒரு தம்பி.. மற்றும் வையவன்) படிப்பிற்காகத் தாம் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது வெள்ளக்குட்டையில் உயர்நிலைப்பள்ளி இல்லாததும் நன்கு வாழ்ந்தபின் தோல்வியுற்று ஊர் திரும்பக்கூடாது என்ற வைராக்கியமும் வையவனின் தாய் வெள்ளக்குட்டைக்குப் போகக்கூடாத  காரணங்களாயின்.
ஹாஸ்டலில் வையவன் 7 முதல் 11ம் வகுப்பு வரை படித்தார். கதைகள் வாசிப்பதிலும் பத்திரிகைகள் படிப்பதிலும் இளமை முதல் அவருக்கு ஏற்பட்டிருந்த ஆர்வம் ஹாஸ்டலிலும் தொடர்ந்தது.  தமிழ் ஒளி என்று ஒரு கவிஞர் இருப்பதையே அறியாத 13ம் வயதில் தமிழ் ஒளி என்று பெயரிட்டு ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி அதில் தமது கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி சக ஹாஸ்டல் நண்பர்களிடம் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வார்.
ஹாஸ்டல் வாழ்க்கையில் பெரிய கட்டுபாடுகள் இல்லாமையும் இலக்கியங்களின் மீது ஈர்ப்பு இருந்ததும் வையவனை படிப்பின்மீது அதிக அக்கறை காட்டவில்லை. ஹாஸ்டலுக்கு அருகாமையில் உள்ள ஒரு நூலகத்திலும் பள்ளி நூலகங்களிலும் நூல்கள் வாசிப்பதும் பத்திரிகைகள் வாசிப்பதுமாக அவரதுபொழுது கழிந்தது. அவர்படித்த நடுநிலைப்பள்ளியில் நூலகத்தில் புத்தகங்கள் அதிகமில்லை. எனவே அவரே அதிகப் புத்தகங்கள் உள்ள நூலகம் கொண்ட பள்ளியான தங்கசாலைத் தெருவில் தொண்டை மண்டலதுளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளி தான் என்று கண்டறிந்து தம் உயர்நிலைப்படிப்பை மாற்றிக்கொண்டார். அங்கே படிக்கும் போது தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் பள்ளிக்கு வந்து பேசிய பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
வையவன் தம் பள்ளி இறுதித் தேர்வை முடிக்கும் போது (எஸ்.எஸ்.எல்.சி) அவரது குடும்பம் தாய் அமிர்த சிகாமணி அம்மாளின் பிறந்த ஊரான திருப்பத்தூருக்குப் பெயர்ந்துவிட்டது. பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் அவர் அங்கே சென்றார். அவரது தந்தை ஒரு சிறு பெட்டிக்கடை நடத்தத் தொடங்கியிருந்தார். அருகிலேயே செல்வாக்கும் பதவியுமுள்ள வசதியான உறவினர்கள் பெரிய வெல்ல மண்டிகள் நடத்தி வந்தனர். அவர்களைப் போல் வையவனை வியாபாரத்தில் ஈடுபடுத்தி வியாபாரியாக்கக் கருதினார் தந்தை பரமசிவம்.
வையவனின் முதலில் ஒரு பல்பொருள் விற்பனைக் கடையில் குமாஸ்தாவாக வேலைக்கு அமர்த்தினார். அந்த கடை முதலாளி வையவனை அடேய் என்று கூப்பிட்டுத் தரக் குறைவாக நடத்தினார் என்பதால் ஒரே வாரத்தில் வையவன் கடையை விட்டுத் தானே விலகிவிட்டார். அடுத்து முனிசிபல் தலைவர் தேர்தலுக்கு நின்ற பிரபல துணிக்கடைக்காரர்  ஒருவரின் உறவினருக்கான வாக்காளர் பட்டியலை எழுதும் வேலையில் ஒரு மாதம் சென்றது. அதற்குப் பின் துணிக்கடை  ஒரு வெல்ல மண்டி என்று சில சில வேலைகள் செய்ய முயன்ற வையவன் எதிலும் பிடிப்பின்றித் திருப்பத்தூரின் பெரிய அரசு நூலகத்தில் பல்வேறு வகை நூல்களை வாசிப்பதிலேயே ஈடுபட்டார்.
இதற்கிடையில் சென்னை வாசத்தின் போது தொண்டை மண்டல துளுவ வேளாளர்  உயர்லைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சி.பத்மநாபன் என்பவர் மாவட்டக் கல்வி அதிகாரியானதால் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு மாவட்டக்கல்வி அதிகாரி நினைத்தால் தம் சொந்த செல்வாக்கின் அடிப்படையில் ஒருவரை  ஆசிரியர் பயிற்சியில் மாணவராக சேர்க்கலாம். வையவன் மீது பரிவும் அன்பும்  கொண்ட அவர் வையவன் எஸ்.எஸ்.எல்.சி முடிக்காததால் ஜூனியர் கிரேட் என்ற [ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கிற] இளநிலை ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பம் போடலாம் என்று கூறினார். அவ்வாறே அவர் விண்ணப்பித்ததற்கு சென்னை அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடமும் கிடைத்தது. ஆனால் தங்கிப்படிக்கவும் சாப்பாட்டுச் செலவிற்கும் தன்னால் பணம் அனுப்ப முடியாது என்று தந்தை பரமசிவம் அறிவித்துவிடவே கிடைத்த வாய்ப்பைப் பயன்ன்படுத்திக் கொள்ள இயலவில்லை.

 வேலையோ சரியான வழிகாட்டலோ இல்லாமல் ஊர் திரிகிற பருவத்தில் தற்செயலாக அறிமுகம் பெற்ற  இளமைப் பருவ நண்பர் வா.சீ. வேங்கடாசலத்தின் தொடர்பால் திராவிட முன்னேற்றக்  
கழகத்தின் மீது தனக்கிருந்த பற்றையும், அண்ணாதுரை மீது இருந்த அன்பையும் விட்டு விலகி தேசீயவாதியானார். அவர்  மூலமாக அன்றைய பிளவுபடாத இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் கிளைச் செயலாளர் கே. கிருஷ்ணசாமி என்பவர் அறிமுகமானார் . அவர் மூலம் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு திருப்பத்தூர் கோடியூர் ஜோலார்ப்பேட்டை ஆகிய சுற்றுப்புறங்களில் பீடித்தொழிற்சங்கங்கள் அமைப்பதிலும் துப்புரவுத் தொழிலாளர் சங்கம் அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். தொழிலாளர் பழக்கமும்நெருக்கமும் வாழ்க்கை என்னவென்று அவருக்கு உணர்த்தின. சோவியத் தநாடு ஜனசக்தி ஆகிய பத்திரிக்கைகளோடு நவசக்தி என்ற தேசிய நாளேட்டின் விநியோஸ்தராகவும அன்றாடம் ரயில் நிலையம் சென்று நாளேடுகளை அங்கிருந்து எடுத்து வந்து சைக்கிளில் வீடுவீடாகப போய் அவற்றை விநியோகிக்கும் வேலை தொடங்கிற்று. இதற்கிடையில் ஒரு வாடகை நூலகத்தில் சிறிது காலம் பணியாளாகப் பெற்ற அனுபவத்தைக்கொ ண்டும்  தனது நண்பர் தி.மு.லோகேசன்  என்பவர் நடத்திய வாடகை நூலகம் மூலம் பயிற்சியைக்  கொண்டும் புதுமைப்பண்ணை என்ற பெயரில் தாமே ஒரு வாடகை நூலகம் தொடங்கினார். இப்படிப்  பல்வேறு அனுபவங்களும் வாசிப்பும் அவரது எழுத்து முயற்சிகளைத் தொடர வைத்தன.[தொடரும்]

Saturday 30 September 2017

வெள்ளக்குட்டை

வெள்ளக்குட்டை
காற்று அங்கிருந்து பெரும் வேகத்தோடு வீசும். ஆடிக்காற்று வீசினால் மரங்கள் எல்லாம் வெறிபிடித்தது போல் தலையாட்டும். ஜன்னல்களும் கதவுகளும் படார் படாரென்று அறைந்து காற்றின் வேத்தைக் குறித்து புகார் சொல்லும்.
அன்று அது வடாற்காடு மாவட்டம். இன்று வேலூர் மாவட்டம். அதிலே உலகப்புகழ் பெற்ற இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ள நகரம் வாணியம்பாடி அங்கிருந்து கிழக்கே செல்கிறது ஒரு மலைச்சாலை. ஜவ்வாது மலையோரத்து ஊரான ஆலங்காயம் செல்லும் சாலை அது.
காற்றின் ஜன்ம பூமி அது தானா என்று ஐயப்படும் அளவில் காற்று அங்கிருந்து தாழ்ந்து இறங்கி வரும். வாணியம்பாடி நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது வெள்ளக்குட்டை என்ற கிராமம்.  கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல மடிப்புத் துண்டுகளாய ஒன்றுவிட்டு ஒன்றாக நிற்கும் குன்றுகளில் நாடுபார்த்தான் மலை என்று ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்தது அந்த கிராமம். அந்த ஊர் மண்ணின் மீது நின்று சுற்றி எல்லாத் திக்குகளையும் பார்த்தால் குன்றுகளே தென்படும். அந்தக் குன்றுகளின் தொட்டிலில் ஊஞ்சல் கட்டி அந்த கிராமத்தைத் தாலாட்டுவது போன்று ஒரு தாழ்வாரத்தில் அமைந்தது அந்த கிராமம்.
அங்கே 24 டிசம்பர் 1939ல் பிறந்தவர் வையவன். வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் வடக்கே திரும்பும் ஒரு சிறு சாலை வழியாகச் செல்லும் போது் அன்று முடிவடைகிறது ஊராக இருந்தது அது. தற்போது அந்தச் சாலை மலைப் பாதையாக சீரமைக்கப்பட்டு வளர்ந்து ஆம்பூர் நகரத்தோடு இணைகிறது.
அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் முருகேசன். தந்தை எம்.எஸ் பரமசிவம். தாய் டி.ஏ. அமிர்தசிகாமணி அம்மாள். அன்றைய கால வழக்கத்தின்படி மிக நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்களின் மூன்றாம் குழந்தை தான் வையவன். அதற்கு முன் இரண்டு குழந்தைகள் இறந்துவிடவே மூன்றாவது குழந்தையும் இறந்துவிடும் என்று பயந்து அவரது தாய் கருக்கலைப்பு செய்தார். இருந்தும் அதை மீறிப் பிறந்தவர் தான் வையவன்.
அவரது முன்னோர்கள் பரம்பரையாக சிறு விவசாயிகள். எனவே வையவனின் தந்தை விவசாயம் செய்திருந்தாலும் அதில் வளர்ச்சி இல்லை என்று கண்டு உள்ளூரில் சைக்கிள் கடை வைத்தும் பருப்பு வாணிகம் செய்தும் கிராமத்தில் அவற்றால் வளர்ச்சி காணமுடியாது 25 மைல் தொலைவில் இருந்த தம் மாமனார் ஊரான திருப்பத்தூர் சென்று அங்கே கடை வைத்துப் பார்த்தார். அதிலும் வெற்றி காணாமல் வெள்ளக் குட்டை கிராம நண்பர்கள் தூண்டுதலால் சென்னைக்குச் சென்றார்.
சென்னையில் பிராட்வேவுக்கு அருகில் இருந்தது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட். அங்கே நண்பர் ஒருவரின் ஒத்தாசையமால் ஒரு கடையை அன்றாட வாடகை பிடித்து அதில் தக்காளி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது 1944 – 45. வையவனுக்கு மூன்று வயது. தம் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் எம்.ஏ. பட்டம் பெறவேண்டும் என்ற கனவுகள் உள்ள தந்தையாக அவர் இருந்தார்.
பரமசிவம் ஒரு நல்ல வாசகர். செய்தி தாள்கள் கதைகள்.. நாவல்கள் வாசித்தல் என்று அவருக்கு வாசிப்பில் ஒரு தனி ஆர்வம் உண்டு. தம் மகனுக்கு (வையவன்) ஆங்கிலம் கற்பிக்க பீடி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்த ஒரு மராட்டியரிடம் தனி டியூஷன் ஏற்பாடு செய்தார். தமிழைக் கற்கும் முன்பே வையவன் ஆங்கிலமே முதலில் அறிமுகமாயிற்று. ஆங்கில மொழியின் மீதும்.. ஆங்கில இலக்கியத்தின் பாலும் வையவனுக்கு தனிப்பிரியம் ஏற்பட அதுவே காரணம்.
வையவனின் தாய் அமிர்த சிகாமணி ஒரு நல்ல கதை சொல்லி. உணர்ச்சி பூர்வமாக மனதில் பதியும்படி கதைகள் சொல்வார். மிகுந்த பக்தியுள்ள அவர் சென்னையில் தாம் வசித்த தங்கசாலை சௌகார்ப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் திருவொற்றியூர் திருவள்ளூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்குத் தாம் செல்வதோடு வையவனையும் அழைத்துச் செல்வார். அமிர்த சிகாமணி ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு முறைப்படி முத்திரை குத்திக்கொண்டவர். அவரிடமிருந்து மகனுக்கு அந்த செல்வாக்கு தானே தன்னையறியாமல் பரவியது.
அந்தக் காலத்தில் தினசரி என்ற செய்தித்தாளில் (டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர்) வார மடல் வரும். அதற்குப் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி. கற்பனைச் சுவை மிகுந்த சிறுகதைகளும் பொற்றாமரை என்ற சீனக்கதையின் தொடரும் அதில் வாராவராம் வெளிரும். பரமசிவம் தன் மகன் வாசிக்க அதை வாங்கி வந்து தருவார்.
நான்கு வயது நிரம்பியதுமே வையவன் கொத்தவால் சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராம்ன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராமன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தார். அது இரு மொழி மாணவருக்கான பள்ளி. அங்கு முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் தெலுங்கு மாணவர்களும் ஒன்றாகவே படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு மட்டும் வேறு பிரிவிற்குச் செல்ல வேண்டும்.
அவர்கள் குடியிருந்த வீடு ஒரு தெலுங்கர் வீடு. கூடவே வாடகைக்கு இருந்தவர்களும் தெலுங்கர்கள். வையவனின் சொந்த ஊர் காற்று அங்கிருந்து பெரும் வேகத்தோடு வீசும். ஆடிக்காற்று வீசினால் மரங்கள் எல்லாம் வெறிபிடித்தது போல் தலையாட்டும். ஜன்னல்களும் கதவுகளும் படார் படாரென்று அறைந்து காற்றின் வேத்தைக் குறித்து புகார் சொல்லும்.
அன்று அது வடாற்காடு மாவட்டம். இன்று வேலூர் மாவட்டம். அதிலே உலகப்புகழ் பெற்ற இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ள நகரம் வாணியம்பாடி அங்கிருந்து கிழக்கே செல்கிறது ஒரு மலைச்சாலை. ஜவ்வாது மலையோரத்து ஊரான ஆலங்காயம் செல்லும் சாலை அது.
காற்றின் ஜன்ம பூமி அது தானா என்று ஐயப்படும் அளவில் காற்று அங்கிருந்து தாழ்ந்து இறங்கி வரும். வாணியம்பாடி நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது வெள்ளக்குட்டை என்ற கிராமம்.  கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல மடிப்புத் துண்டுகளாய ஒன்றுவிட்டு ஒன்றாக நிற்கும் குன்றுகளில் நாடுபார்த்தான் மலை என்று ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்தது அந்த கிராமம். அந்த ஊர் மண்ணின் மீது நின்று சுற்றி எல்லாத் திக்குகளையும் பார்த்தால் குன்றுகளே தென்படும். அந்தக் குன்றுகளின் தொட்டிலில் ஊஞ்சல் கட்டி அந்த கிராமத்தைத் தாலாட்டுவது போன்று ஒரு தாழ்வாரத்தில் அமைந்தது அந்த கிராமம்.
அங்கே 24 டிசம்பர் 1939ல் பிறந்தவர் வையவன். வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் வடக்கே திரும்பும் ஒரு சிறு சாலை வழியாகச் செல்லும் போது் அன்று முடிவடைகிறது ஊராக இருந்தது அது. தற்போது அந்தச் சாலை மலைப் பாதையாக சீரமைக்கப்பட்டு வளர்ந்து ஆம்பூர் நகரத்தோடு இணைகிறது.
அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் முருகேசன். தந்தை எம்.எஸ் பரமசிவம். தாய் டி.ஏ. அமிர்தசிகாமணி அம்மாள். அன்றைய கால வழக்கத்தின்படி மிக நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்களின் மூன்றாம் குழந்தை தான் வையவன். அதற்கு முன் இரண்டு குழந்தைகள் இறந்துவிடவே மூன்றாவது குழந்தையும் இறந்துவிடும் என்று பயந்து அவரது தாய் கருக்கலைப்பு செய்தார். இருந்தும் அதை மீறிப் பிறந்தவர் தான் வையவன்.
அவரது முன்னோர்கள் பரம்பரையாக சிறு விவசாயிகள். எனவே வையவனின் தந்தை விவசாயம் செய்திருந்தாலும் அதில் வளர்ச்சி இல்லை என்று கண்டு உள்ளூரில் சைக்கிள் கடை வைத்தும் பருப்பு வாணிகம் செய்தும் கிராமத்தில் அவற்றால் வளர்ச்சி காணமுடியாது 25 மைல் தொலைவில் இருந்த தம் மாமனார் ஊரான திருப்பத்தூர் சென்று அங்கே கடை வைத்துப் பார்த்தார். அதிலும் வெற்றி காணாமல் வெள்ளக் குட்டை கிராம நண்பர்கள் தூண்டுதலால் சென்னைக்குச் சென்றார்.
சென்னையில் பிராட்வேவுக்கு அருகில் இருந்தது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட். அங்கே நண்பர் ஒருவரின் ஒத்தாசையமால் ஒரு கடையை அன்றாட வாடகை பிடித்து அதில் தக்காளி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது 1944 – 45. வையவனுக்கு மூன்று வயது. தம் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் எம்.ஏ. பட்டம் பெறவேண்டும் என்ற கனவுகள் உள்ள தந்தையாக அவர் இருந்தார்.
பரமசிவம் ஒரு நல்ல வாசகர். செய்தி தாள்கள் கதைகள்.. நாவல்கள் வாசித்தல் என்று அவருக்கு வாசிப்பில் ஒரு தனி ஆர்வம் உண்டு. தம் மகனுக்கு (வையவன்) ஆங்கிலம் கற்பிக்க பீடி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்த ஒரு மராட்டியரிடம் தனி டியூஷன் ஏற்பாடு செய்தார். தமிழைக் கற்கும் முன்பே வையவன் ஆங்கிலமே முதலில் அறிமுகமாயிற்று. ஆங்கில மொழியின் மீதும்.. ஆங்கில இலக்கியத்தின் பாலும் வையவனுக்கு தனிப்பிரியம் ஏற்பட அதுவே காரணம்.
வையவனின் தாய் அமிர்த சிகாமணி ஒரு நல்ல கதை சொல்லி. உணர்ச்சி பூர்வமாக மனதில் பதியும்படி கதைகள் சொல்வார். மிகுந்த பக்தியுள்ள அவர் சென்னையில் தாம் வசித்த தங்கசாலை சௌகார்ப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் திருவொற்றியூர் திருவள்ளூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்குத் தாம் செல்வதோடு வையவனையும் அழைத்துச் செல்வார். அமிர்த சிகாமணி ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு முறைப்படி முத்திரை குத்திக்கொண்டவர். அவரிடமிருந்து மகனுக்கு அந்த செல்வாக்கு தானே தன்னையறியாமல் பரவியது.
அந்தக் காலத்தில் தினசரி என்ற செய்தித்தாளில் (எ.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர்) வார மடல் வரும். அதற்குப் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி. கற்பனைச் சுவை மிகுந்த சிறுகதைகளும் பொற்றாமரை என்ற சீனக்கதையின் தொடரும் அதில் வாராவராம் வெளிரும். பரமசிவம் தன் மகன் வாசிக்க அதை வாங்கி வந்து தருவார்.
நான்கு வயது நிரம்பியதுமே வையவன் கொத்தவால் சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராம்ன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராமன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தார். அது இரு மொழி மாணவருக்கான பள்ளி. அங்கு முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் தெலுங்கு மாணவர்களும் ஒன்றாகவே படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு மட்டும் வேறு பிரிவிற்குச் செல்ல வேண்டும்.
அவர்கள் குடியிருந்த வீடு ஒரு தெலுங்கர் வீடு. கூடவே வாடகைக்கு இருந்தவர்களும் தெலுங்கர்கள். வையவனின் சொந்த ஊர் வெள்ளக்குட்டையில் எதிர்வீடு ஒரு தெலுங்கு பேசும் சாத்தானி பிராம்மணர்கள் வசித்த வீடு. இவ்வாறு சிறு வருவத்திலேயே தெலுங்கின் சுற்றுச் சூழல் அவருக்கு ஏற்படவே தெலுங்கு வெகு சரளமாகப் பேசும் திறன் அவருக்கு அமைந்தது.
அவர்களது குடும்ப டாக்டர் முத்தையா பிள்ளை என்பவர் ஒரு மலையாளி. அவரது மனைவி வையவனுக்கு ஆறு வயதிலேயே மலையாளம் கற்றுக்கொடுத்தார். அந்த டாக்டர் மாறிவிடவே மலையாளக் கல்வி நின்று விட்டது. வையவன் ஆறாம் வகுப்பில் ஹிந்திபடித்தார். பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஹிந்தி வகுப்புகள் நின்று போனதால் அவரால் தொடர முடியவில்லை.
இந்தச் சூழ்நிலைகளால் வையவனுக்கு எல்லா மொழிகளின் மீதும் நேசம் ஓர் இயல்பாயிற்று. புரொக்ரஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த போது வையவன் வாழ்வில் ஒரு துயரமான திருப்பம் நேரிட்டது. முன்னுக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் உந்துதலும் உள்ள அவரது தந்தை பரமசிவம் கொத்தவால் சாவடியில் தக்காளி வியாபரம் செய்வதில் சலிப்புற்று புளி சீயக்காய் ஆகிய பொருள்களை கர்நாடகத்தில் டும்கூரில் மொத்தமாக வாங்கி வந்து சென்னை மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அதில் நேரிட்ட எதிர்பாராத சந்தை வீழ்ச்சியால் பரமசிவம் கை முதல் அனைத்தையும் இழந்து குடும்பத்தை வறுமையில் ஆழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பள்ளிகளில் கட்டணம் செலுத்திப் படிக்கிற காலம் அது. வையவனுக்குப் பள்ளிக்கட்டணம் கட்டவோ சென்னையில் குடும்பம் நடத்தவோ இயலாத நிலை நேரிட்டது. பரமசிவம் தன் மகன் பெரிய படிப்பாளி ஆகவேண்டும் என்று விரும்பினாலும் இயலாததால் அவரைப் பள்ளியைவிட்டு நிறுத்திக் கடைகளில் எடுபிடிப் பையனாகச் சேர்த்துவிடாலாமா என்று யோசிக்கலானார்.காற்று அங்கிருந்து பெரும் வேகத்தோடு வீசும். ஆடிக்காற்று வீசினால் மரங்கள் எல்லாம் வெறிபிடித்தது போல் தலையாட்டும். ஜன்னல்களும் கதவுகளும் படார் படாரென்று அறைந்து காற்றின் வேத்தைக் குறித்து புகார் சொல்லும்.
அன்று அது வடாற்காடு மாவட்டம். இன்று வேலூர் மாவட்டம். அதிலே உலகப்புகழ் பெற்ற இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ள நகரம் வாணியம்பாடி அங்கிருந்து கிழக்கே செல்கிறது ஒரு மலைச்சாலை. ஜவ்வாது மலையோரத்து ஊரான ஆலங்காயம் செல்லும் சாலை அது.
காற்றின் ஜன்ம பூமி அது தானா என்று ஐயப்படும் அளவில் காற்று அங்கிருந்து தாழ்ந்து இறங்கி வரும். வாணியம்பாடி நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது வெள்ளக்குட்டை என்ற கிராமம்.  கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல மடிப்புத் துண்டுகளாய ஒன்றுவிட்டு ஒன்றாக நிற்கும் குன்றுகளில் நாடுபார்த்தான் மலை என்று ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்தது அந்த கிராமம். அந்த ஊர் மண்ணின் மீது நின்று சுற்றி எல்லாத் திக்குகளையும் பார்த்தால் குன்றுகளே தென்படும். அந்தக் குன்றுகளின் தொட்டிலில் ஊஞ்சல் கட்டி அந்த கிராமத்தைத் தாலாட்டுவது போன்று ஒரு தாழ்வாரத்தில் அமைந்தது அந்த கிராமம்.
அங்கே 24 டிசம்பர் 1939ல் பிறந்தவர் வையவன். வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் வடக்கே திரும்பும் ஒரு சிறு சாலை வழியாகச் செல்லும் போது் அன்று முடிவடைகிறது ஊராக இருந்தது அது. தற்போது அந்தச் சாலை மலைப் பாதையாக சீரமைக்கப்பட்டு வளர்ந்து ஆம்பூர் நகரத்தோடு இணைகிறது.
அவரது தாத்தா சிவானந்த கவுண்டரின்பெ தந்தை முருகைய கவுண்டர்  அவருக்கு வைத்த பெயர் முருகேசன். தந்தை எம்.எஸ் பரமசிவம். தாய் டி.ஏ. அமிர்தசிகாமணி அம்மாள். அன்றைய கால வழக்கத்தின்படி மிக நெருங்கிய சொந்தத்தில் [பரமசிவத்தின் அத்தை மகள் அமிர்தசிகாமணி] மணம் செய்து கொண்ட அவர்களின் மூன்றாம் குழந்தை தான் வையவன். அதற்கு முன் இரண்டு குழந்தைகள் இறந்துவிடவே மூன்றாவது குழந்தையும் இறந்துவிடும் என்று பயந்து அவரது தாய் கருக்கலைப்பு செய்தார். இருந்தும் அதை மீறிப் பிறந்தவர் தான் வையவன்.
அவரது முன்னோர்கள் பரம்பரையாக சிறு விவசாயிகள். எனவே வையவனின் தந்தை விவசாயம் செய்திருந்தாலும் அதில் வளர்ச்சி இல்லை. வானம் பார்த்த பூமி அவர்கள் பூமி.  என்று கண்டு உள்ளூரில் சைக்கிள் கடை வைத்தும் பருப்பு வாணிகம் செய்தும் கிராமத்தில் அவற்றால் வளர்ச்சி காணமுடியாது 25 மைல் தொலைவில் இருந்த தம் மாமனார் ஊரான திருப்பத்தூர் சென்று அங்கே கடை வைத்துப் பார்த்தார். அதிலும் வெற்றி காணாமல் வெள்ளக் குட்டை கிராம நண்பர்கள் தூண்டுதலால் சென்னைக்குச் சென்றார்.
சென்னையில் பிராட்வேவுக்கு அருகில் இருந்தது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட். அங்கே நண்பர் ஒருவரின் ஒத்தாசையமால் ஒரு கடையை அன்றாட வாடகை பிடித்து அதில் தக்காளி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது 1944 – 45. வையவனுக்கு மூன்று வயது. தம் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் எம்.ஏ. பட்டம் பெறவேண்டும் என்ற கனவுகள் உள்ள தந்தையாக அவர் இருந்தார்.
பரமசிவம் ஒரு நல்ல வாசகர். செய்தி தாள்கள் கதைகள்.. நாவல்கள் வாசித்தல் என்று அவருக்கு வாசிப்பில் ஒரு தனி ஆர்வம் உண்டு. தம் மகனுக்கு (வையவன்) ஆங்கிலம் கற்பிக்க பீடி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்த ஒரு மராட்டியரிடம் தனி டியூஷன் ஏற்பாடு செய்தார். தமிழைக் கற்கும் முன்பே வையவன் ஆங்கிலமே முதலில் அறிமுகமாயிற்று. ஆங்கில மொழியின் மீதும்.. ஆங்கில இலக்கியத்தின் பாலும் வையவனுக்கு தனிப்பிரியம் ஏற்பட அதுவே காரணம்.
வையவனின் தாய் அமிர்த சிகாமணி ஒரு நல்ல கதை சொல்லி. உணர்ச்சி பூர்வமாக மனதில் பதியும்படி கதைகள் சொல்வார். மிகுந்த பக்தியுள்ள அவர் சென்னையில் தாம் வசித்த தங்கசாலை சௌகார்ப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் திருவொற்றியூர் திருவள்ளூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்குத் தாம் செல்வதோடு வையவனையும் அழைத்துச் செல்வார். அமிர்த சிகாமணி ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு முறைப்படி முத்திரை குத்திக்கொண்டவர். அவரிடமிருந்து மகனுக்கு அந்த செல்வாக்கு தானே தன்னையறியாமல் பரவியது.
அந்தக் காலத்தில் தினசரி என்ற செய்தித்தாளில் (எ.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர்) வார மடல் வரும். அதற்குப் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி. கற்பனைச் சுவை மிகுந்த சிறுகதைகளும் பொற்றாமரை என்ற சீனக்கதையின் தொடரும் அதில் வாராவராம் வெளிரும். பரமசிவம் தன் மகன் வாசிக்க அதை வாங்கி வந்து தருவார்.
நான்கு வயது நிரம்பியதுமே வையவன் கொத்தவால் சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராம்ன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராமன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தார். அது இரு மொழி மாணவருக்கான பள்ளி. அங்கு முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் தெலுங்கு மாணவர்களும் ஒன்றாகவே படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு மட்டும் வேறு பிரிவிற்குச் செல்ல வேண்டும்.
அவர்கள் குடியிருந்த வீடு ஒரு தெலுங்கர் வீடு. கூடவே வாடகைக்கு இருந்தவர்களும் தெலுங்கர்கள். வையவனின் சொந்த ஊர் வெள்ளக்குட்டையில் எதிர்வீடு ஒரு தெலுங்கு பேசும் சாத்தானி பிராம்மணர்கள் வசித்த வீடு. இவ்வாறு சிறு வருவத்திலேயே தெலுங்கின் சுற்றுச் சூழல் அவருக்கு ஏற்படவே தெலுங்கு வெகு சரளமாகப் பேசும் திறன் அவருக்கு அமைந்தது.
அவர்களது குடும்ப டாக்டர் முத்தையா பிள்ளை என்பவர் ஒரு மலையாளி. அவரது மனைவி வையவனுக்கு ஆறு வயதிலேயே மலையாளம் கற்றுக்கொடுத்தார். அந்த டாக்டர் மாறிவிடவே மலையாளக் கல்வி நின்று விட்டது. வையவன் ஆறாம் வகுப்பில் ஹிந்திபடித்தார். பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஹிந்தி வகுப்புகள் நின்று போனதால் அவரால் தொடர முடியவில்லை.
இந்தச் சூழ்நிலைகளால் வையவனுக்கு எல்லா மொழிகளின் மீதும் நேசம் ஓர் இயல்பாயிற்று. புரொக்ரஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த போது வையவன் வாழ்வில் ஒரு துயரமான திருப்பம் நேரிட்டது. முன்னுக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் உந்துதலும் உள்ள அவரது தந்தை பரமசிவம் கொத்தவால் சாவடியில் தக்காளி வியாபரம் செய்வதில் சலிப்புற்று புளி சீயக்காய் ஆகிய பொருள்களை கர்நாடகத்தில் டும்கூரில் மொத்தமாக வாங்கி வந்து சென்னை மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அதில் நேரிட்ட எதிர்பாராத சந்தை வீழ்ச்சியால் பரமசிவம் கை முதல் அனைத்தையும் இழந்து குடும்பத்தை வறுமையில் ஆழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பள்ளிகளில் கட்டணம் செலுத்திப் படிக்கிற காலம் அது. வையவனுக்குப் பள்ளிக்கட்டணம் கட்டவோ சென்னையில் குடும்பம் நடத்தவோ இயலாத நிலை நேரிட்டது. பரமசிவம் தன் மகன் பெரிய படிப்பாளி ஆகவேண்டும் என்று விரும்பினாலும் இயலாததால் அவரைப் பள்ளியைவிட்டு நிறுத்திக் கடைகளில் எடுபிடிப் பையனாகச் சேர்த்துவிடலாமா என்று யோசிக்கலானார்[தொடரும்]